செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் மீண்டும் தொடங்கப்பட்ட பண்ணவாடி பரிசல் சவாரி… பொதுமக்கள் மகிழ்ச்சி…!! Revathy Anish22 July 20240194 views தர்மபுரி மற்றும் சேலம் நீர்நிலைகளின் கரை ஓரத்தில் பண்ணவாடி பரிசல் துறை உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கும், மேட்டூர் கொளத்தூர், பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர், நாகமரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பரிசலை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் பரிசில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் மீண்டும் பரிசல் மற்றும் விசை படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் கடல் போல காட்சி அளிப்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமான பகுதிக்கு வந்து செல்கின்றனர்