கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறப்பு… ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

கர்நாடக-தமிழக எல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வரும் நீரின் வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்தது.

எனவே அப்பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. மேலும் கர்நாடக அணையில் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உபரி நீர் தொடர்ச்சியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. எனவே நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!