16 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த வேண்டுதல்… திருச்செந்தூர் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசுமாலை அன்பளிப்பு…!!

மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க காசு மாலை வழங்குவதாக வேண்டியிருந்தார். இந்நிலையில் நேற்று அதனை நிறைவேற்ற தனது குடும்பத்துடன் போஸ் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார்.

இதனையடுத்து சுமார் 978 கிராம் எடையுள்ள 70 லட்சம் மதிப்பிலான தங்க காசு மாலையை கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கியுள்ளார். அப்போது அவருடன் உள்துறை கண்காணிப்பாளர் அறுபுத்தமணி, பேஷ்கார் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!