பழிக்குப்பழி… ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 3 ரவுடிகளுக்கு வலைவீச்சு…

ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் புதிதாக 4 ரவுடிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான முக்கிய பொறுப்பு ஆற்காடு சுரேஷின் நிழல் போல செயல்பட்டு வந்த சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் இவர்கள் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் சம்போ செந்தில் உத்தரப்பிரதேச மாவட்டம் நொய்டா பகுதியில் பதுங்கி இருப்பதாகவும், சீசிங் ராஜா ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே பதுங்கி இருப்பதாக தெரிந்த நிலையில் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று அவர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கிற்கு வலது கரமாக செயல்பட்டு பாம் சரவணன் என்ற ரவுடி அவரது கொலைக்குப் பழிக்கு பழி வாங்க நேரம் பார்த்து காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் சிசிங் ராஜா மற்றும் சம்போ செந்திலை கொலை செய்ய வேண்டும் என சபதமும் எடுத்துள்ளார். ஆகவே மற்றொரு விபரீதம் நடப்பதற்குள் மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என காவல்துறையினர் முழுவீச்சில் களமிறங்கி உள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!