ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள்… ஜவுளி கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!! Revathy Anish7 July 20240107 views ஈரோடு மாவட்டம் அண்ணாதுரை வீதியில் வசித்து வரும் பர்கத்பாவா என்பவர் மணிக்கூண்டு அருகே ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி காலையில் அவர் தனது குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நள்ளிரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ள இருந்த 2 லட்சத்தி 8 ஆயிரம் ரூபாய் பணமும், 3 பவுன் நகையும் காணாமல் போய் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பர்கத்பாவா உடனடியாக சூரம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தபோது திருடர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்தது உறுதியானது. மேலும் வீட்டில் இருந்து கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.