செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் பறந்த பேருந்தின் மேற்கூரை… 11 மின்கம்பங்கள் சரிவு… பழனியில் சூறைக்காற்று…!! Revathy Anish25 July 2024074 views திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதியில் நேற்று சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் பல இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் கீரனூரில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பலத்த காற்று வீசியதால் பேருந்தின் மேற்கூரை ஒரு பக்கமாக பறந்து விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பேருந்து நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.