செய்திகள் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் ரவுடி துரை என்கவுண்டர் வழக்கு… தாய் அளித்த பரபரப்பு புகார்… ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை…!! Revathy Anish18 July 2024076 views புதுக்கோட்டை மாவட்டம் தைலமரக்காடு பகுதியில் கடந்த 11-ஆம் தேதி காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடி துரை என்பவர் ஆலங்குடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ ஐஸ்வர்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி துரையின் தாய் மல்லிகா என் மகனை போலி என்கவுண்டரில் சுட்டு கொன்றதாகவும், இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் வருகின்ற 19ஆம் தேதி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வைத்து ரவுடி துரை என்கவுண்டர் செய்யப்பட்டதற்கான விசாரணை நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் நேரில் வந்து ஆர்.டி.ஓவிடம் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.