திருடு போன 200 பவுன் நகை… அதிர்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி… நாகர்கோவிலில் பரபரப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் வசித்து வரும் பகவதியப்பன் இஸ்ரோவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு பகவதியப்பன் தன் மனைவியுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டிற்குள் இருந்த பொருள்கள் சிதறி கிடந்தது. பீரோ, லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 200 பவுன் தங்க நகை, 12 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது.

இது குறித்து பகவதியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் சுந்தரவனம் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதனையடுத்து திருட வந்த மர்ம நபர்கள் பீரோவிற்குள் பணம் இல்லாததை அறிந்து பகவதியப்பன் அறையில் இருந்த லாக்கரை சுவரோடு உடைத்து தூக்கி சென்றது தெரியவந்தது. மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 தனிப்படை அமைத்து அப்புகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!