செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் மகன் இறந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு… செங்கோட்டை அருகே சோகம்…!! Revathy Anish26 August 20240189 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காமாட்சி தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அசோக்(8) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் அசோக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தால் கணவன் – மனைவி இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் மகனின் இறப்பை தாங்க முடியாமல் தவித்த செல்வகுமார் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற நிலையில் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.