கோவிலுக்கு செல்ல மறுத்ததால் திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் சாலமேடு என்.ஜி.ஓ காலனியில் மங்கள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மங்கள்ராஜ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கார்த்திகேயனை செல்லுமாறு கூறியுள்ளார்.

அதற்கு அவர் மறுத்ததால் மங்கள்ராஜ் திட்டியதாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!