கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்… ரயிலில் அதிரடி சோதனை… 10 வடமாநில இளைஞர் கைது…!! Revathy Anish29 June 2024081 views பீகார் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் ரயில்வே போலீசாரின் உதவியுடன் அதிரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பீகாரில் இருந்து வந்த ரயில் சென்று பயணிகளின் உடமைகளை சோதனை செய்ததில் வடமாநில இளைஞர்களின் பைகளில் 10 கிலோ போதை பொருள் இருப்பது கண்டுபிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 10 வடமாநில இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.