செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்… மிகவும் வேதனை அளிக்கிறது… முதல்வர் இரங்கல்…!! Revathy Anish1 July 2024083 views இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் உடல்நலக்குறைவால் இலங்கை கொழும்பு மருத்துவமனையில் நேற்று காலமானார். இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரா. சம்பந்தன் இறுதி மூச்சு வரை தமிழ்மக்களின் நலனுக்கான சிந்தித்தவர் என கூறினார். மேலும் பாராளுமன்றத்தில் அரை நூற்றாண்டு காலம் பணிபுரிந்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் நலனுக்கு அறவழியில் நீண்டகாலம் அவர் போராடியுள்ளார். தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் அவர் மீது அதிகளவில் மரியாதை கொண்டுள்ளதாகவும் இவரின் மறைவு வேதனை அளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.