கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை… மாணவிகள் அளித்த புகார்… மாணவன் அதிரடி கைது…!! Revathy Anish23 July 20240170 views நாகர்கோவிலை சேர்ந்த ஸ்ரீதரன்(22) என்ற வாலிபர் கோவை கல்லூரியில் எம்.ஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதரன் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர் அதை காண்பித்து மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஸ்ரீதரன் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே தேனியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஸ்ரீதரன் மீது பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில் காவல்துறையினர் ஸ்ரீதரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.