செய்திகள் மாநில செய்திகள் பாலியல் தொல்லை வழக்கு… சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு… முதல்வர் உத்தரவு…!! Revathy Anish24 August 2024083 views கிருஷ்ணகிரி மாவட்டம் காந்தி குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர் தாளாளர் என 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிவராமன் கைதாகவதற்கு முன்பு போலீசருக்கு பயந்து எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த காவல்துறையினர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிவராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கபட்டது குறித்து சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி பாலியல் பலாத்காரம் குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் விசாரிக்கப்படும் என கூறினார். இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஐ ஜி பவானிசுவரர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.