செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் பேருந்தில் பாலியல் தொல்லை… மாணவியின் துணிச்சலான செயல்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!! Revathy Anish18 July 20240112 views சென்னை நுங்கம்பாக்கம் இருந்து புரசைவாக்கம் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் பாலியல் தொல்லையை அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் என அடித்து தட்டி கேட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற பயணிகளும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரித்ததில் அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராமு என்பதும், ஓட்டேரி பகுதியில் கூலி தொழில் பார்த்து வந்தும். இதனையடுத்து போலீசார் ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.