செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் ரயிலில் வைத்து பாலியல் தொல்லை… துணிச்சலான மாணவியின் செயல்… வாலிபர் அதிரடி கைது…!! Revathy Anish29 June 2024090 views மங்களூரில் இருந்து மெயில் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் சட்டக்கல்லூரியில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ரயிலில் வைத்து வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த பெண் தட்டி கேட்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சென்னை சென்டிரல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சஜன்(28) என்பதும், இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதே ரயிலில் மற்றொரு பெட்டியில் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இவர் மட்டும் சட்டக்கல்லூரி மாணவி பயணித்த பெட்டியில் ஏறி அவருக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சஜனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.