மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அதிர்ச்சி… பெற்றோர்கள் நூதன போராட்டம்…!!

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வயலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 220 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்ததாலும், தேவையான வகுப்பறைகள் இல்லாததால் கூடுதலாக 3வகுப்பறைகள் மற்றும் லேப் கட்டிடத்தை கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த கட்டிடங்களை கட்ட பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இல்லை.

மேலும் இந்த பள்ளி கனரக வாகனங்கள் செல்லும் பகுதியில் அமைந்துள்ளதால், ஊருக்கு நடுவில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி கட்டிடங்கள் கட்டினால் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானமும் கிடைப்பதோடு, இடவசதியும் கிடைக்கும் என மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் என அனைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பள்ளி வளாகத்திலேயே கட்டிட வேலைகளை அதிகாரிகள் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சில தினங்களில் வேறு இடத்தை தேர்வு செய்து அங்கு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும் என உறுதி அளித்த பின்னரே பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!