செய்திகள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள் உதவி செய்வது போல நடித்த கடைக்காரர்… பைக்கில் வைத்து பெண்ணுக்கு தொல்லை… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024086 views நாகை மாவட்டம் பாப்பாகோவில் அடுத்துள்ள பெரிய நரியங்குடி பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். சலூன் கடை வைத்திருக்கும் இவர் சம்பவத்தன்று பாப்பாகோவில் பேருந்து நிலையத்தில் பேருந்திற்க்காக காத்திருந்த 59 வயதுமிக்க பெண் ஒருவரிடம் நல்லவர் போன்று பேசியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் வீட்டிற்கு அழைத்து செல்வதாக குமரவேல் கூறினார். இதனை நம்பிய அவரும் குமரவேலின் இருசக்கர வாகனத்தில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் குமரவேல் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து உடனடியாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்து காலில் காயத்துடன் தப்பித்தார். இதற்குப்பின் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.