தமிழகத்திற்குள் இயங்க கூடாது… நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதி…வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கம்…!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் கடந்த 17ஆம் தேதி வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில் அதன் உரிமையாளர்கள் சுப்ரீம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘ஆல் இந்தியா பெர்மிட்’ கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கி கொள்ளலாம் எனவும், அந்த பேருந்துகளை சிறைபிடிக்க கூடாது என இடைக்கால அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்து இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்குள் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என ஆம்னி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!