திருட வந்த இடத்தில் தூக்கம்… கடைக்காரரிடம் சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டம் பங்களா மேடு டி.பி மேற்கு தெரு பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன்(60) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலையில் ராஜேந்திரன் வழக்கம் போல மளிகை கடையில் திறக்க சென்றார். அப்போது கடைக்கு உள்ளே வாலிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வாலிபரை பிடித்து தேனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்த விஸ்வநாதன்(25) என்பதும், ராஜேந்திரன் கடையின் மேற்கூறையை பிரித்து திருட வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து விஸ்வநாதன் மதுபோதையில் திருட வந்ததால் இரவு கடையிலேயே படுத்து உறங்கி விட்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!