ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் தாயையே வெட்டிய மகன்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ஈரோட்டில் பரபரப்பு…!! Revathy Anish29 June 20240134 views ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பாப்பாத்தி(46) என்பவர் வசித்து வந்துள்ளார். அதே ஊரில் இவரது மகன் பழனிசாமி(46) குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பாப்பாத்தி மற்றும் பழனிசாமி தங்களது 1 1/2 ஏக்கர் குடும்ப நிலத்தை விற்பனை செய்து 1 லட்சம் ரூபாய் முன்பணமாக வாங்கி இருந்தனர். இந்நிலையில் தினமும் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த பழனிசாமி திடீரென பாப்பாத்தி வீட்டிற்கு சென்று நிலம் விற்ற மீதி பணத்தை பெற்று என்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அவருக்கும் பாப்பாத்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பழனிசாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தாய் என்றும் பாராமல் பாப்பாத்தியை வெட்டி கொலை செய்துள்ளார். இதனை அறிந்த சென்னிமலை காவல்துறையினர் உடனடியாக பழனிசாமியை கைது செய்துள்ளனர். மேலும் பாப்பாத்தியின் உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.