ஆதரவின்றி நிற்கும் மகன்… தாய் 2-வது திருமணம்… காவல் நிலையத்தில் சிறுவன் அளித்த மனு…!!

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த 15 வயது சிறுவன் தாயை மீட்டு தர வேண்டும் என மிகவும் வருத்தத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என் தான்-தாய் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் நான் சில காலம் பாட்டி வீட்டில் வசித்தேன். இதனையடுத்து என் தந்தை பல முறை சேர்ந்து வாழலாம் என்று என் அம்மாவை அழைத்தபோதும் அவர் வரவில்லை.

தற்போது எனது அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை நான் தட்டி கேட்டதால் அவர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். என் பாட்டி வீட்டிலும் என்னை சேர்த்து கொள்ளவில்லை. இப்போது நானும் எனது தந்தையும் ஆதரவின்றி நிற்கிறோம். எனவே எனது தாயை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் இருந்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!