Home செய்திகள் சொரிமுத்து அய்யனார் கோவில்… ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்ல கட்டுப்பாடுகள்…!!

சொரிமுத்து அய்யனார் கோவில்… ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்ல கட்டுப்பாடுகள்…!!

by Revathy Anish
0 comment

ஆடி மாதம் அமாவாசையில் முன்னிட்டு பக்தர்கள் பலரும் நெல்லை பாபநாசம் அருகே உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்று வழிபடுவது வழக்கம். அங்கு ஆடி அமாவாசை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆடி அம்மாவாசை திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவை முன்னேற்ற வருகின்ற 31-ஆம் தேதி விழா ஆகஸ்ட் 8-தேதி வரை அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு, மாஞ்சோலை போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாபநாசம், காரையாறு பகுதிகள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 31, ஆகஸ்ட் 1 ஆகிய இரு தினங்களில் அப்பகுதிகளில் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதித்து சேரன்மகாதேவி உதவி கலெக்டர் அரபித் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் திருவிழா சமயத்தில் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் கலந்த சோப்பு, ஷாம்பூ, மண்ணெண்ணெய், மது குட்கா போன்ற போதை பொருள்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். சோதனை சாவடியில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்படும். ஆகவே பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.