சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்… செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவிப்பு…!!

சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக வெள்ளி, சனி ஆகிய தினங்களில் சிறப்பு பேருந்து பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று முதல் 28ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி இன்று 260 பேருந்துகளும், சனிக்கிழமை 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பயணிகள் www.tnstc.com என்ற மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!