Home செய்திகள் திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைவு… சேகர்பாபு உத்தரவு…!!

திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைவு… சேகர்பாபு உத்தரவு…!!

by Revathy Anish
0 comment

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆடி கிருத்திகை, திருப்படி திருவிழா தினத்தில் வழக்கத்தை விட கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன் அடிப்படையில் வருகின்ற 27 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன கட்டணத்தை குறைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அதனை பரிசீலித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரின் உத்தரவின்படி திருத்தணி கோவிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு தரிசன கட்டணம் 200 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக குறைக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கோவில் அறங்காவலர் குழு கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.