செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் சிறப்பு பவுர்ணமி கிரிவலம்… திருவண்ணாமலைக்கு திரண்ட பக்தர்கள்… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!! Revathy Anish19 August 20240128 views திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்றனர். அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.