கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் நிபா வைரஸ் பரவல்… கேரளாவிற்கு கல்விசுற்றுலா ரத்து… வெளியான அறிக்கை…!! Revathy Anish25 July 2024096 views கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 6 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழக-கேரள எல்லைகளில் சுகாதார குழு மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இயங்கி வரும் 2 தனியார் கல்லூரிகள் மாணவர்களை கேரளாவிற்கு கல்வி சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தனர். தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் கல்லூரி நிர்வாகம் சுற்றுலாவை ரத்து செய்துள்ளனர். இது குறித்து கோவை அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளின் கல்வி இயக்குனர் கலை செல்வி வெளியிட்ட அறிக்கையில், நிபா வைரஸ் பரவுவதால் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக் கருதி கேரளாவிற்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.