செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் மாநிலத்தலைவர் கொலை வழக்கு… ஆற்காடு பாலு உள்பட 8 பேர் சரண்… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish6 July 2024062 views சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் 6 தனிப்படைகளை அமைத்து தப்பிய ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்பட 8 நாங்கள் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என தாமாக வந்து சரணடைந்துள்ளனர் அவர்களிடம் காவல்துறை துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.