செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் குற்றாலம் அருவியில்இருந்து விழுந்த பாறை கற்கள்… 5 பேர் படுகாயம்…!! Revathy Anish22 August 20240135 views தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் அருவியில் இருந்து திடீரென பாறை கற்கள் உருண்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அருவியின் மேற்பகுதிக்கு சென்று கண்காணித்து வருகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.