மாணவனை கடித்த தெருநாய்… மருத்துவமனையில் சிகிச்சை… தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்…!!

சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள சேணியம்மன் கோவில் தெருவில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவுரிநாத் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கவுரிநாத் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளான். அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென கவுரிநாத்தின் இடதுகை தோள்பட்டையில் பலமாக கண்டித்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக நாயை விரட்டி விட்டனர்.

இந்நிலையில் தனலட்சுமி கவுரிநாத்தை மீட்டு அப்பகுதியில் உள்ள சின்ன ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு நாய்கடிக்கு போடும் மருந்து இல்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுவனை பெரிய ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தொடர்ச்சியாக இதுபோன்ற நாய் கடி சம்பவம் நடப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!