மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியில் ஓவிய கலை பிரிவு ஆசிரியராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் பாலியல் தொல்லை அளித்த ராமச்சந்திர சோனியை பள்ளி நிர்வாகம் சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். இதை அடுத்து போலீசார் ராமச்சந்திர சோனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போல் 15 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!