கிருஷ்ணகிரி செய்திகள் மாவட்ட செய்திகள் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் திடீர் சோதனை… 2,89,500 ரூபாய் பறிமுதல்… போலீசார் விசாரணை…!! Revathy Anish12 July 2024078 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள சமத்துபுரம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேல் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக கணக்கில் வராமல் 2,89,500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் பணிபுரிபவர்களிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றனது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.