ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் ஊருக்கு செல்வதற்காக கிளம்பாக்கம் வந்த பயணிகள் பிற மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவு பேருந்துகள் கிடைக்காமல் அவதி அடைந்தனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டான், கடலூர், பண்ருட்டி போன்ற பகுதிகளுக்கு தேவையான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் குழந்தைகளுடன் இரவு 10 மணி வரை பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பயணிகள் கிளம்பாக்கத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.