அமெரிக்காவில் கடந்த இரண்டாம் தேதி முதல் நடைபெற்று வந்த லிக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு அணிகள் தயாராகியுள்ளது. லீக் சுற்றில் சிறப்பிடம் பிடித்த எட்டு அணிகள் சூப்பர் 8 வாய்ப்பை பெற்றுள்ளன.
கடைசி அணியாக டி பிரிவிலிருந்து வங்கதேசம் அந்த வாய்ப்பை பெற்றுள்ளது. நேபாளத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வங்கதேச வீரர்கள் பெருமூச்சு விட்டனர். இல்லையேல் முன்னாள் சேம்பியன்களான இலங்கை, பாகிஸ்தான் ஆகிய வரிசையில் வங்கதேசமும் நடையை கட்டி இருக்கும்.
அமெரிக்காவில் ஆடுகளங்கள் கணிக்க முடியாத அளவு வடிவமைக்கப்பட்டிருந்ததால் முன்னிலை வீரர்கள் கூட பேட்டிங்கில் சோதிக்கப்பட்டனர். ஆனால் சூப்பர் 8 சுற்று நடக்கும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள களங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
அதில் ஒவ்வொரு ஆணியும் எப்படி திறமையை வெளிப்படுத்தப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்னிலையில் நாளை நடைபெற இருக்கும் லீக் போட்டியில் அமெரிக்காவுடன் தென்னாப்பிரிக்கா மோத இருக்கிறது.