செய்திகள் மாநில செய்திகள் ஹஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆதரவு… என்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்ட வழக்கு…!! Revathy Anish18 August 20240101 views உலக நாடுகளால் “ஹஸ்புத் தஹீரிர்” என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பிற்கு யூட்யூபில் ஆள் சேர்ப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை சேர்ந்த 6 பேரை சைபர் கிரைம் காவல் துறையினர் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றர். இதை தொடர்ந்து ஹஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்க்கப்பட்ட இடங்களை ஆராய்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.