74
தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி தஞ்சாவூரில் அருளானந்தம் நகர், சாலியமங்களம், மானாங்கோரை போன்ற 5 இடங்களிலும், புதுக்கோட்டை மாத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் இடத்திலும், அதேபோல் திருச்சியிலும் என்.ஐ.ஏ. தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.