திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் முனியப்பன். இவர் கொட்டப்பட்டு பகுதியில் 1200 சதுர அடி அளவில் ஒரு வீட்டு மனை வாங்கி உள்ளார். இதற்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் மனையை உட்பிரிவு செய்ய சர்வேயர் முருகேசன் என்பவர் முனியப்பன் இடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கு அவர் மறுத்ததால் 5,000 குறைத்துக் கொண்டு 10,000 கொடுத்தல் மனையை உட்பிரிவு செய்து தருவேன் என கட்டாயமாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தின் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முனியப்பனிடம் ரசாயனம் தடவிய 10,000 ரூபாய் பணத்தை வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்த சர்வேயர் முருகேசனிடம் கொடுக்குமாறு கூறினார். அதேபோல் முனியப்பன் அந்த பணத்தை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும், களவுமாக கைது செய்தனர்.