அரியலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் மருமகள் மீது சந்தேகம்… பாட்டி செய்த கொடூரம்… 1 வயது பெண் குழந்தை பலி…!! Revathy Anish21 July 2024088 views அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் ராஜா-சந்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சந்தியா தனது மாமியாருடன் வசித்து வருகிறார். சந்தியாவிற்கு மோனிஷ்(2), கிருத்திகா(1)என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சந்தியா வீட்டிற்கு அருகே உள்ள பால்பண்ணைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது கிருத்திகா வாயில் மண்ணுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த சந்தியா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிருத்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் தளவாய் காவல்நிலத்தில் கிருத்திகா இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தியாவின் மாமியார் விருதாம்பாளை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விருதாம்மாள் சந்தியாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பில் தான் கிருத்திகா பிறந்துள்ளார். அவர் என் பேத்தி இல்லை என கூறினார். சம்பவத்தன்று எனது பேரன் மோனிஷ் மீது மண்ணை அள்ளி போட்டு கிருத்திகா விளையாடிக் கொண்டிருந்தாள் இதனை பார்த்த ஆத்திரம் கிருத்திகா வாயில் மண்ணை திணித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை கேட்ட போலீசார் விருதாம்பாளை கைது செய்தனர்.