செய்திகள் மாநில செய்திகள் நவீன வசதிகளுடன் தமிழ்நாடு இல்லம்… பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்…!! Revathy Anish26 July 20240154 views தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் டெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் போது அவர்கள் தங்குவதற்காக 2 தமிழ்நாடு இல்லங்கள் இருக்கிறது. இந்த 2 இல்லங்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்ட முதலமைச்சர் திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் சுமார் 257 கோடி ரூபாய் செலவில் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ஏவா வேலு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.