செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் கஞ்சாவால் எல்லை மீறும் வாலிபர்கள்… 6 பேர் கைது… கஞ்சா வியாபாரி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு…!! Revathy Anish6 July 2024076 views திண்டுக்கல் மாவட்டம் பழனி பலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராம்குமார், மதன்குமார், சிவகுமார், கார்த்திக், மகாபிரபு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பழனி தண்டாயுதபாணி கோவில் பூங்காவில் வைத்து கஞ்சா புகைக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிகளிடம் இருந்த கஞ்சா, புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள திருவிழாவில் சாமி வேஷமிட்டு கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுவதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் கைதான வாலிபர்களின் கூட்டாளிகளான மணிகண்டன் மதி, கஞ்சா வியாபாரி பாஸ்கர், முத்துராஜா ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.