திருப்பூர் மாவட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை மாநில அரசு அபகரிப்பதாகவு, அதற்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை, கோவில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என தெரிவித்தனர். இதனை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் மூலம் வரும் வருமானத்தை கொண்டு கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், முறையாக பராமரிக்கவும் வேண்டும் என இந்து முன்னணியினர் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் தலைமை தாங்கிய நிலையில் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கோஷங்களை எழுப்பி வீதியில் சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.