செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் டாஸ்மாக் அருகே பயங்கரம்… மேஸ்திரியை கல்லால் தாக்கி கொலை… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish7 July 2024063 views திருப்பூர் மாவட்டம் சிவன் தியேட்டர் பகுதியில் சந்திரன்(50) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று குன்னத்தூர் கருமஞ்சிரையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே தலையில் தாக்கப்ப்டட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரனில் தலையில் கல்லை வைத்து தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவரை கொலை செய்தது யார் என்றும் எதற்க்காக கொலை செய்தார்கள் என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.