சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவருக்கு இந்துமதி(32) என்ற மனைவியும், வேல்முருகன்(13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் அடிக்கடி மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று காலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இந்துமதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த சுரேஷை கைது செய்தனர். மேலும் இந்துமதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.