நான் பார்த்த ஆச்சரிய மனிதர்… ஆட்டோ டிரைவரின் திறமை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அந்த ஆட்டோவை ஓட்டிய முதியவர் மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசினார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த அந்த நபர் உடனடியாக அவரது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அப்போது ஆட்டோ டிரைவர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள், உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் லண்டன், அமெரிக்கா, பாரிஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு போகலாம் என்று கூறினார்.

இந்த வீடியோவை தாது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அந்த நபர் ஆச்சரிய மனிதரை சந்தித்தேன் என்றும், அவரின் ஆங்கில புலமையை கண்டு நானே ஒரு கட்டத்தில் தருமாறி திகைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் அவர் மிகவும் வேடிக்கையாக உரையாடினார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஆட்டோ டிரைவரை பாராட்டி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!