செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் கால்வாயில் விழுந்த குட்டி… காப்பாற்ற முயன்ற பெண் யானை… உதவி செய்த வனத்துறையினர்…!! Revathy Anish25 June 2024082 views நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒரு பெண் யானை அதன் குட்டியுடன் அப்பர் கார்குடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கால்வாய் ஒன்றி குட்டி யானை தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்த தாய் யானை குட்டியை மீட்க போராடியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் விஜய் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என சம்பவ இடத்திற்கு சென்று யானை குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு கால்வாயில் தத்தளித்த யானை குட்டியை மீட்டு பத்திரமாக தாய் யானையிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.