சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள தோட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் கூலி வேலை செய்துள்ளார். இவர் அந்த தோட்டத்திலேயே உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த பாம்பு சதீஷ்குமாரின் மகன் வருணை(4) கடித்துள்ளது.
இதனை அறிந்த சதீஷ்குமார் உடனடியாக வருணை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் இருந்து அவரை மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வருண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.