முதல் அமைச்சருக்கு எதிரான வழக்கு… வருகின்ற 22-ஆம் தேதி தீர்ப்பு… வெளியான தகவல்…!!

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போது கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக இந்த உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனிநீதிபதி உரிமைக்குழு நோட்டிசை ரத்து செய்தார்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், சி. குமரப்பன் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து வழக்கை தேதி அறிவிக்காமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில் வருகின்ற 22-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட் தகவல் பட்டியலில் வெளியாகியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!