Home செய்திகள் பதுங்கி இருந்த குற்றவாளிகள்… அடைக்கலம் கொடுத்த கவுன்சிலர் கணவர்…பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!!

பதுங்கி இருந்த குற்றவாளிகள்… அடைக்கலம் கொடுத்த கவுன்சிலர் கணவர்…பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!!

by Revathy Anish
0 comment

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரூபின்ஷா என்பவர் உள்ளார். இவரது கணவர் அலெக்ஸ். இந்நிலையில் இவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் ரூபின்ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டின் ஒரு அறையில் கட்டிலுக்கு அடியில் சிலர் ஒளிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அர்னால்டு ஆண்டனி(23), கெயில் ஆண்டனி(22), பால்சாமி(23) அருண்குமார்(21) என்பதும், அவர்கள் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த கத்தி, அருவாள் ஆகிய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ரூபின்ஷா கணவர் அலெக்ஸ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.