கணவன் பலி… நண்பர்களுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேகுளி பகுதியில் வசித்து வந்த ராம்குமார்(26) என்பவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சுஜாதா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானத்தில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் நாகராசப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ராம்குமார் திடீரென அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் சுஜாதாவிடம் நடத்திய விசாரணையில் உண்மை சம்பவம் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்ததால் ஆத்திரமடைந்த சுஜாதா அவரது நண்பர்களான சூளகிரி பகுதியை சேர்ந்த கணேசன்(19), மோகன்(18) ஆகிய இருவரின் உதவியால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராம்குமாரை மின்சார ஒயரால் கழுத்தை இறுக்கியும், தலையில் தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து சுஜாதா, கணேசன், மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!