கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் காதலிப்பதாக மருத்துவர் ஆடிய நாடகம்… பயிற்சி மருத்துவர் அளித்த புகார்… 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!! Revathy Anish21 July 20240104 views நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் ஷாம் சுந்தர் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை சேர்ந்த பெண் ஒருவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அப்போது ஷாம் சுந்தருக்கு பயிற்சி மருத்துவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து ஷாம் தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அவர் கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். நானும் பயிற்சியை முடித்துவிட்டு கோவை திரும்பிய பிறகு மீண்டும் நாங்கள் காதலை தொடர்ந்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாம் சுந்தரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறினேன். அதற்கு பதில் அளிக்காத ஷாம் சுந்தர் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மேலும் ஷாம் சுந்தருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஷாம் சுந்தர் மீது பொது இடத்தில் ஆபாச செயல்படுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், திருமணமானதை மறைத்து மற்றொரு பெண்ணை ஏமாற்றியதற்காக நம்பிக்கை மோசடி என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.